IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
ஏன் ஏன் ஏன்...?
சத்தியா
post Jul 1 2008, 11:10 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53






ஏன் ஏன் ஏன்...?


ஓராயிரம் ஆசைகளை
உன் உள்ளத்தினுள்
புதைத்து வைத்து...

உன் மௌனத்தின் பூட்டை மட்டும்
ஏன் இன்று வரை
திறக்காமல் வைத்திருந்தாய்...?

கோடான கோடிக் கேள்விகள்
என் உள்ளத்துள்
கரைபுரண்டோடி நிற்க...

உனது கையினை
இறுகப் பற்றி
நெற்றியில் ஒருசிறு
முத்தம் இட்டு
என் நேசத்தை
உனக்குணர்த்தி விட்டு...

என் பரிசுத்தமான அன்பை
கண்ணீர்த் துளிகள் கொண்டு
உன் பாதங்களில்
காணிக்கையாக்கியவாறு...

கனக்கும் வார்த்தைகளைக் கசக்கி
கவியாய்த் தொடுத்து விட்டு
என் கண்ணீரைத்
துடைத்துக் கொள்கின்றேன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Keerthisara
post Jul 2 2008, 04:38 AM
Post #2


Senior
**********

Group: Advancing Members
Posts: 383
Joined: 19-April 07
Member No.: 984



ம்..ம்.., நாம் நேசிப்பவர்களினதும், எம்மை நேசிப்பவர்களினதும் நேசம் நெஞ்சமெல்லாம் நிறைந்திட வெளிப்படையாக நாம் பறிமாறிக்கொள்ளும் அன்பினால் மட்டும் தான் முடியும்!
வாழ்த்துக்கள் அக்கா!


--------------------
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Jul 2 2008, 06:21 AM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 12,034
Joined: 26-January 08
Member No.: 2,683



நல்ல காதல் கவிதை! தனது அன்பை உணர்த்தும் நிலையும் அற்புதம்! வாழ்த்துக்கள் சத்தியா! 41.gif 41.gif 41.gif 41.gif 41.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jul 2 2008, 08:36 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 23,105
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



ஏன் ஏன் ஏன்...?

அதுதான் நானும் யோசிக்கிறேன்...
இன்னும் இரண்டு கேள்விகள் அதிகமாகக் கேளுங்கோ சத்தியா.. smile.gif



யதார்த்தமான கவிதைக்கு வாழ்த்துக்கள் சத்தியா.... thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jul 2 2008, 11:01 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



பிரிவுத் துயர் ஆறுதல்
அடைய
நானும் இரு சொட்டு நீர் உகுக்கிறேன் . . .!

சொல்ல வேண்டியதைச்
சொல்லாமல் இருந்தாலும் கஷ்டம் !

சொல்லாமல் இருக்க வேண்டியதைச்
சொன்னாலும் கஷ்டம் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
சின்னா
post Jul 2 2008, 04:43 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 2,933
Joined: 1-February 07
Member No.: 848



பெண்: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டுபேசி பேசி ராசியானதே மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே... ரொம்ப நாளானதே...

ஆண்: மாலையிட காத்து அல்லி இருக்கு... தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு...

பெண்: இது சாயங்காலமாம் மடி சாயுங்காலமாம்...


ஆண்: முல்லைப் பூச்சூடு மெல்ல பாய் போடு

பெண்: அட வாடைக் காத்து சூடு ஏத்துது

பெண்: ஆத்துக்குள்ள நேத்து உன்னை நெனச்சேன்... வெக்க நெறம் போக மஞ்ச குளிச்சேன்...

ஆண்: கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா


பெண்: அது கூடாது இது தாங்காது.... ஆண்: சின்ன காம்புதானே பூவத் தாங்குது (பொத்தி வச்ச
)

சோகங்கள் சுகமாகட்டும் இந்த பாடலைபோல........ biggrin.gif

அழகான ஏக்கம்.....
வாழ்த்துக்கள் சத்தியா.... smile.gif








This post has been edited by சின்னா: Jul 2 2008, 04:47 PM


--------------------
உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 6 2008, 03:34 PM
Post #7


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53




கவியோடு இணைந்து
கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 1st August 2010 - 07:12 AM