எதுவரை தொடருமோ...? |
![]() ![]() |
எதுவரை தொடருமோ...? |
Jul 6 2008, 03:34 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() எதுவரை தொடருமோ...? தூறலில் நனைந்து குளிர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு சிரித்திருக்கும் துளிர்கள், இலைகள், பூக்கள்… மெல்லிய குளிர் கலந்து சில்லென்று எனை உரசிச் செல்லும் இளம் தென்றல் காற்று… அன்னை விரல் இறுகப் பற்றி அடியெடுத்து வைத்து அன்னம் போல் நடக்கும் சின்னஞ் சிறு மழலை… ஜோடி சேர்ந்து பாடிப் பறக்கும் பறவைகள்… இப்படியே என் கண்ணில் காண்பவைகள், உணர்பவைகள் எல்லாவற்றிலுமே உன் ஞாபகங்கள் சுமந்தவாறே… இன்னும் இன்னும் உனைத் தேடிக் கொண்டிருக்கின்றேன் நான்! கழிந்து போகிறது காலம் வழிந்து போகிறது வாழ்க்கை! ம்... அறிவுக்கும், உணர்விற்கும் அகப்படாத எதற்குள்ளோ வீழ்ந்து வாழ்க்கையின் வளைவுகளில் முட்டி மோதும் உராய்வுகளோடு... நதியைத் தேடி ஓடை ஒன்று அலையாகி அலையாகி கரை தாண்டி ஓடுவதாய்... பெருமூச்சோடு நீளும் வாழ்க்கையில் இன்னும் எஞ்சிக் கிடக்கும் ஆயுட் காலங்களில் எதுவரை தொடருமோ இந்தத் தேடும் படலம்...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 6 2008, 04:27 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஓடையின் தேடல் நதி வரை
நதியின் தேடல் கடல் வரை கடலின் தேடல் சூல் கொண்ட கார்முகில் ஆம் வரை முகிலின் தேடல் நீராய் பொழிந்து ஓடையாய் மாறும் வரை ஓடையின் தேடல் . . . இப்படித்தான் சக்கரம் சுற்றிக் கொண்டேஇருக்கும் சத்தியா உங்கள் தேடலும்தான் பலமான தேடற் கவிதைக்கு எம் பாராட்டுக்களோடு, -மகுடதீபன் This post has been edited by மகுடதீபன்: Jul 6 2008, 04:28 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Jul 6 2008, 07:32 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
எதுவரை தொடருமோ...?
வாழ்ககையில் எல்லாம் கிடைத்தபோதும்... ஏங்கும் மனம் இன்னும் எதையெதையோ தேடி.. தேடிய யாவும் கிடைத்தால் வாழ்வில் மகிழ்விற்கு ஏது எல்லை..? கவிக்கு வாழ்த்துக்கள் சத்தியா..... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jul 7 2008, 11:01 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
கழிந்து போகிறது காலம்
வழிந்து போகிறது நதியைத் தேடி ஓடை ஒன்று அலையாகி அலையாகி கரை தாண்டி ஓடுவதாய்... ....................நல்ல வரிகள் நண்பி................................................................... -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Jul 8 2008, 08:52 AM
Post
#5
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா, நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.
-------------------- |
|
|
|
Jul 8 2008, 11:40 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
வாழ்க்கை என்னும் பாதையில் தேடல் என்பது ஒரு பகுதி! நம் எல்லோரின் வாழ்க்கையிலும் எல்லாம் இருந்தும் எதையாவது தேடித்தான் மனது அலைபாயும்! நிச்சயம் நீங்கள் தேடியது சீக்கிரம் கிடைக்கும்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள் சத்தியா!
-------------------- |
|
|
|
Jul 8 2008, 08:18 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
ஊற்றெடுத்த உன் கவிதைகள்....
வார்த்தைகள் வற்றாமல் தங்கு தடையின்றித் தொடரட்டும்...... This post has been edited by சத்தியா: Jul 8 2008, 08:32 PM
Reason for edit: எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது.
-------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Jul 12 2008, 04:21 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
கவியோடு இணைந்து கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு... என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 18 2008, 05:18 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
கவிவரிகள் அத்தனையும்
இனிமை மிக இனிமை... வார்த்தைகள் சத்தியாவிடம் வசமாக வசமாகி விளையாடுகின்றன... தேடல்களே வாழ்க்கை. வாழ்த்துக்கள் சத்தியா. -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:13 AM |