மலரும் நினைவுகளில்...! |
![]() ![]() |
மலரும் நினைவுகளில்...! |
Jul 13 2008, 11:54 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() மலரும் நினைவுகளில்...! உறக்கம் தொலைத்த இரவில் நிசப்தம் கொல்லும் என் வீட்டுச் சுவர்க் கடிகாரம்! தூக்கம் தொலைத்துக் கிடக்க மனசை உரசிவிட்டுப் போகும் என் தேசத்து நினைவலைகள்! பலமாய் வீசும் காற்றில் முற்றத்து மல்லிகைப் பந்தலில் உதிர்ந்து விழும் பூக்களும்... மாமரங்களின் பழுத்த இலைகளும் சருகாகி காற்றோடு பறந்து போகும்! தூறல் போடும் வானம் மண்வாசம் கிளர்த்தி நாசியைத் துளைத்து உள்ளே நுழையும் வாசம்! அடடா! ... அடடா! இதைப் பார்ப்பதிலும் அனுபவிப்பதிலும் எத்தனை சுகம்தான் இந்த மனதுக்கு...? சேவல் கூவும் காலை! தென்றல் தீண்டும் வாசல்! அழகாய் உதிக்கும் சூரியன்! கருக்கல் மாலைப் பொழுது! கூடி வாழ்ந்த வீடு! ஓடி விளையாடிய முற்றம்! நான் வளர்த்த பூனைக் குட்டி! வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி! நீச்சல் அடித்த குளம்! மீன் பிடித்த வாய்க்கால்! துள்ளித் திரிந்த சாலை! பள்ளி பயின்ற கூடம்! ம்... இவை எல்லாமே இன்னும் இன்னும் என் நெஞ்சுக் குழிக்குள் எஞ்சிக் கிடக்கும் என் தேச வாசனைகள்! ஓ!... அந்தச் சொர்க்கமான நிமிசங்களை எல்லாம் எந்த வரிகள் கொண்டு என்னால் பூரணப்படுத்த முடியும்...? எண்ணிப் பார்க்கும் போது ஏதோ ஒரு வெறுமை நெஞ்சை அடைத்து என்னைக் கொல்லாமல் கொல்லும்! வாய் வலிக்கக் கேட்கிறேன் நான் நடந்த பாதைகளில் மீண்டும் என் கால் பதியுமா...? ம்ம்... இப்படித்தான் மனதில் பொத்தி வைத்திருக்கும் மலரும் நினைவுகளில் வீழ்ந்து ஈரமாகும் என் விழிகளை... யாரும் அறிந்திருக்கப் போவதில்லை அறிந்த என் தலையணையைத் தவிர! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 13 2008, 12:02 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
எழுத்துக்களும், வார்த்தைகளும்
அழும் இரண வேதனை தலையணை மட்டுமா நாங்களும் அறிவோம் உங்கள் கவிதை கண்டு . . . அது சரி சத்தியா உங்களுக்கும் பிடிக்குமா எங்கோ மழைபெய்யும் போது வரும் அம் மண் வாசனை ? உள்ளம் உறங்காத போது சுவர்க் கடிகாரத்தின் டிக் டிக் என்ன, வாஷ் பேசினில் சொட்டும் நீர் ஓசையும் நாராசம்தான் . . .! மலரும் நினைவுகள் நன்று ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Jul 13 2008, 12:15 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
அது சரி சத்தியா உங்களுக்கும் பிடிக்குமா எங்கோ மழைபெய்யும் போது வரும் அம் மண் வாசனை ? ம்ம்... ரொம்பப் பிடிக்குமே! நான் பிறந்தது முதல் என் வீட்டையும் என் நாட்டையும் விட்டுப் பறந்து வரும் வரை அனுபவித்த மண் வாசனை அல்லவா அது! ம்ம்... உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் மகுடதீபன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 13 2008, 03:29 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
அறியாதவயதில் அனுபவித்த அழகிய நினைவுகளை கவிதைக்கு இரையாக்கியவிதம் என்னையும் மீட்டுப்பார்க்க செய்கிறது என் இளம் வயது நினைவுகளை.....
நற்சூழ்நிலை மலர்ந்திட வாழ்த்துக்கள்...... This post has been edited by சின்னா: Jul 13 2008, 03:31 PM -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Jul 13 2008, 07:04 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 303 Joined: 15-December 07 Member No.: 2,659 |
கடைசி இரண்டு வரிகள் எவ்வளவு கணமாய் விழுந்திருக்கின்றன. கவிதை முழுதும் சின்னச் சின்ன எளிய வார்த்தைகள்; வார்த்தைகளுக்குள்
அடங்களான நினைவுகள். ஆயிரம் கவிதைகளை என்னிடம் காண்பித்தால், சத்தியா அவர்களின் கவிதையை மட்டும் என்னால் பிரித்துவிடமுடியும். தனிநடையாய் அவர்களுக்கு வாய்த்துவிட்டது. வாழ்த்துக்கள். -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Jul 13 2008, 07:13 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
கவிதையை வாசிக்கும் போது
எனக்கும் ஓர் சோகம்.. மறுபடியும் மனம் மகிழ்ந்து.. மலருமா அந்த நினைவுகள்.. நாடு படும் கேடால் நாமும் நாளும் விழிஈரம்தான். வாழ்த்துக்கள் சத்தியா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jul 13 2008, 07:34 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
அழுது வடிக்காமல் ஏதேனும் செய்வோம் சத்யா.
உன் நேர்மை நெஞ்சு போலவே கவிதையைக் கண்டேன். எழுவோம். ஏதாகிலும் செய்வோம். ஊரான ஊர் நினக்குந்தொறும் நினைக்குந்தொறும் நெஞ்சு வெடிக்கும் கதை. எவளவு காலத்திற்கு பொறுதிருப்பதாம்?????? காதல், பாசம்..இவையிரண்டையும் விட இது பெரிய ரரரரணணணம்ம்ம்ம்ம்ம்ம்ம். கவிதைக்கு -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Jul 14 2008, 07:13 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
கடைசி நான்கு வரிகள் படிக்கும்போதே கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. நல்ல உணர்வு மிக்க கவிதை! வாழ்த்துக்கள் சத்தியா!
-------------------- |
|
|
|
Jul 17 2008, 03:00 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
சத்தியாவின் மலரும் நினைவுகளால்
சத்தமின்றி மலர்ந்து சிரிக்கின்றது எனது பழைய நினைவுகளும்... வாழ்த்துக்கள் சத்தியா. -------------------- |
|
|
|
Aug 21 2008, 09:46 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
கவியோடு இணைந்து கருத்துச் சொன்ன சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 22 2008, 05:58 AM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 977 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
அழகான கவிதை சத்தியா
நானும் ஒரு கனம் நாட்டுக்கு போய் வந்தேன் என்னையும் தழுவியது உங்கள் ஏக்கம் இளம் சூரியனின் இதமான வருடல் அப்பப்பா...எவ்வளவு சுகம் அங்கு... வெறுமையில்லாத வாழ்கை என்னையும் சிந்திக்க செய்த உங்கள் கவிக்கு என் நன்றிகள்..வாழ்த்துகள் |
|
|
|
Aug 22 2008, 02:15 PM
Post
#12
|
|
|
விவேகமானவர் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 91 Joined: 5-April 08 Member No.: 2,753 |
வாவ் அருமையான கவிதை சத்தியா
இன்று தான் இந்தக் கவிதையை படித்தேன். ஏக்கங்களை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கவிதையென்ற ஊடகமும் நம் நட்பு வலையும் இருக்கும்போது கண்ணீரெல்லாம் எதற்கு? மலர்ந்த நினைவுகள் வாடாமல் அடிக்கடி மலர்ந்து படிக்கும் அனைவரது நினைவுகளையும் மலர வைத்து மணம் வீசச்செய்கிறீர்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் என் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டன. கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சத்தியா. |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:28 PM |