IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
எப்போது பெளர்ணமியாவாய்…?
சத்தியா
post Aug 21 2008, 10:02 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53





எப்போது பெளர்ணமியாவாய்…?


உள்ளத்தின் உணர்வுகள்
உன் உணர்வால்
எனை மெல்ல
அணைத்துக் கொள்ள…

நீ வரும் வழி பார்த்து
என் விழிகள்
வழியில் தவம் கிடக்கின்றன!

அமைதியாய் நானிருந்து
அன்போடு உனை நினைத்து
உருகும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும்
எப்போதும்
நீயேதான் நிறைகின்றாய் !

ஓ...!
ஒவ்வொரு பொழுதுகளிலும் - நீ
என்னருகில் வேண்டும் போல்
என் மனம்
வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது!

ம்…!
நீயே சொல்!
என் மன வானில்
எப்போது நீ
பெளர்ணமியாவாய்…?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Aug 21 2008, 11:55 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



ஆறாத் தாகம் இருந்து கொண்டே
இருக்க வேணும் கவிஞனுக்கு . .

அப்போதுதான்
ஆறாய் கவிதைகள் பெருக்கெடுக்கும்

சத்தியாவின் தாக மலையில் இருந்து வரும்
இன்னொரு ஆறு ...

பௌர்ணமி வெளிச்சமாய் வியாபித்து
படம் போலவே வண்ண வண்ணமாய் ஒளிர்கிறது . .

வாழ்த்துக்கள் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
sooryakumar
post Aug 22 2008, 12:11 AM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,035
Joined: 16-November 06
From: டென்மார்க்
Member No.: 736



வாஞ்சை....
என்ற சொல்
அழகாக வந்து வீழ்ந்திருக்கிறது,
தங்கள் காலடியில்.

கவிதையை வாழ்த்தவா....அல்லது
அந்தச் சொல்லை வாழ்த்தவா??????

பி.கு.
வாஞ்சிநாதன்.


--------------------
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
Go to the top of the page
 
+Quote Post
meera
post Aug 22 2008, 06:13 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 1,221
Joined: 25-July 06
From: germany
Member No.: 589



தேடலோடு கலந்த பார்வை அனலை தெறிக்கிறது
தித்திப்பு கவியில் இங்கு இனிக்கிறது
தெவிட்டாத சுவையில் மனம் துடிக்கிறது
தேவைகள் நிறைவேறவே வாழ்த்துகிறது
Go to the top of the page
 
+Quote Post
பார்கவி மோஹன்
post Aug 22 2008, 02:09 PM
Post #5


விவேகமானவர்
*******

Group: Members
Posts: 91
Joined: 5-April 08
Member No.: 2,753



தவம் நிறைவு பெற்று
உணர்வுகள் உண்மையாகி
வாஞ்சைப்படும் மனதை
வாஞ்சையாய் அணைத்து
துளிக் கண்ணீர் துடைத்து
உன்னருகில் மட்டுமல்ல
உன்னிலேயே உறைந்து
உன்னையே முழுமதியாய்
உயர்த்தும்
அந்த உணர்வு சீக்கிரமே வரும்

பாராட்டுக்கள் சத்தியா
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Aug 22 2008, 04:51 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 12,034
Joined: 26-January 08
Member No.: 2,683



நிலாவில் அமாவாசை வந்தாலும் அழகான வெளிச்சம் தரக்கூடிய பெளர்ணமியும் வரும்!
கவிதை வரிகள் அனைத்தும் முத்துக்கள்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சத்தியா! 41.gif 41.gif 41.gif 41.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
jeyaraman
post Aug 22 2008, 06:24 PM
Post #7


Senior
**********

Group: Advancing Members
Posts: 312
Joined: 15-December 07
Member No.: 2,659



'உணர்வே அணைத்துக் கொள்ள,
விழிகள் தவம் கிடக்க,
கண்ணீர்த்துளியில் உருவம் நிறைய,
ஒவ்வொரு பொழுதிலும்
அருகிருக்க வாஞ்சைப் பட'-
இவற்றையெல்லாம்விட
'மன வானில் பௌர்ணமியாகிவிட்டால்
தேடலே தேவையில்லை என்கிறது
சத்தியா அவர்களின் கவிதை.


--------------------


-உரப்புளி நா.ஜெயராமன்
Go to the top of the page
 
+Quote Post
சின்னா
post Aug 24 2008, 08:10 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 2,933
Joined: 1-February 07
Member No.: 848



வஞ்சிக்கொடியின் வாஞ்சையில் சிக்கிய
வாலிபனே நீதான் யாரோ.....??

இவள் நெஞ்சம் நிரைந்து
நித்திரை துலைக்கப் பிறந்தவனே.....

கண்ணீர் துளிகளை வெண்ணீர் ஆக்கியவனே...
சிவந்துபோன இவள் விழிகளை பார்....!!

சித்திரம் போன்ற இவள் கவியை நிரப்பியவனே.....!
யார்...? யார்.....? யாரடா நீ.......???? tongue_smile.gif

வாழ்த்துக்கள் சத்தியா......
தேடலில்தான் எத்தனை இன்பம் நிரைந்திருக்கின்றன.....


--------------------
உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
Go to the top of the page
 
+Quote Post
iamnaagaraa
post Aug 25 2008, 01:53 AM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,354
Joined: 9-March 08
Member No.: 2,724



QUOTE (சத்த @ Aug 21 2008, 11:02 PM) *

எப்போது பெளர்ணமியாவாய்…?


உள்ளத்தின் உணர்வுகள்
(கடவுள்)உன் உணர்வால்
எனை மெல்ல
அணைத்துக் கொள்ள…

நீ வரும் வழி பார்த்து
என் விழிகள்
வழியில் தவம் கிடக்கின்றன!

அமைதியாய் நானிருந்து
அன்போடு உனை நினைத்து
உருகும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும்
எப்போதும்
நீயேதான் நிறைகின்றாய் !

ஓ...!
ஒவ்வொரு பொழுதுகளிலும் - நீ
என்னருகில் வேண்டும் போல்
என் மனம்
வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது!

ம்…!
நீயே சொல்!
என் மன வானில்
எப்போது நீ
பெளர்ணமியாவாய்…?


அடைப்புக் குறிகளில் கடவுள் போட்டால்
நல்ல ஆன்மீகக் கவிதை

கடவுளின் பதில்:

இருண்ட உன் மன வானம்
இருதயத்துள் சுழிய
பௌர்ணமி மனமாய்
நான் பீறிட்டு வழிவேன்!


--------------------
Go to the top of the page
 
+Quote Post
punithavm
post Aug 26 2008, 07:45 AM
Post #10


Senior
**********

Group: Members
Posts: 116
Joined: 16-May 06
Member No.: 520



வாழ்த்துகள் சத்தியா...அழகான கவிதை அந்த பௌர்ணமி நிலவைப் போல...


--------------------
நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்
user posted image
இனியவள் புனிதா
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Aug 26 2008, 02:52 PM
Post #11


Senior
**********

Group: Senior Members
Posts: 23,105
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துகள் சத்தியா... thumbs_up.gif

பௌர்ணமியைக் காண..
அமாவாசையில் இருந்துதான் ஆகவேண்டும்..
வாழ்க்கையில் தேடுவது கிடைக்க சில காலம்..
இப்படியான கஸ்டங்களையும் சந்திக்க நேரிடும்..
உங்கள் வாழ்வில் ஒளிமயமான பௌர்மணி வர வாழ்த்துகள். smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 3 2008, 12:46 PM
Post #12


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53




கவியோடு இணைந்து
கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு
என் மனமார்ந்த நன்றிகள். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 1st August 2010 - 07:17 AM