உன் நினைவுகளும் நானும்... |
![]() ![]() |
உன் நினைவுகளும் நானும்... |
Sep 3 2008, 01:25 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() உன் நினைவுகளும் நானும்... வருடக்கணக்காய் வாடிய விழிகளுடன் உனைத் தேடிய நீண்ட கொடிய பயணத்தில்... கனவுகள் அறுத்து நிஜத்தோடு போராடி ஓடி ஓடி ஒரு எல்லைக் கோட்டில் வீழ்ந்து... வெள்ளி முழைத்த ஒரு காலைப் பொழுதில் துள்ளிக் குதித்து நிமிர்ந்து பார்த்த போது... என் விழிகளுக்குள் நீ முதன் முதலாய் விழுந்த அந்த வீதி... கவிழ்ந்த தலையும் ஊமைப் பேச்சுமாய் மனம் பதைபதைக்க சிலமணி நேரம் தரித்து நின்ற விழுது பரப்பிய அந்த உயர்ந்த மரம்... உயிர்த் தீயில் உருகி உன்னுள்ளே உறைந்து நீண்ட பெருமூச்செறிந்து உனைப் பிரிய மனமின்றி விட்டுப் பிரிந்து சென்ற அந்த முச்சந்தி... ஓ... மீண்டும் நடந்த பாதைகளில் பதிந்த சுவடுகளில் நான் நடந்து வரும் போதெல்லாம்... ஆழப் புதைந்த நினைவுகள் எல்லாம் உயிர் கொண்டெழுந்து ஒவ்வொரு முறையும் எனை உரசி விட்டுப் போக... கடந்து போன பாதைகளில் தடம் பதிந்த உன் நினைவுகள் மூட்டிய தீயில்... ஓவென்று உள்ளிருந்து ஒப்பாரி வைத்து என் இதயம் கதறிய வார்த்தைகளையும்... கழன்று விழும் கண்ணீர் முத்துக்களையும் நான் சிதறியே செல்கின்றேன். ஆண்டுகள் பல கடந்தாலும் மீண்டும் அந்த வீதியோரம் என்றாவது நீ பயணம் செய்தால்... அங்கே விழுந்து கிடக்கும் அந்தத் துளிகள் சொல்லும் கதைகளை ஓர் தடவை உன் காதுகளைக் கூர்மைப்படுத்தி கேட்டுத்தான் பாரேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Sep 3 2008, 02:58 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
படம் பார்த்ததும் நினைத்தேன்
பனித் துளிகள் என . . . ! அப்புறம்தான் தங்கள் கண்ணீர் முத்துக்கள் என்று ! பரிதி வந்தால் பனித்துளி காய்ந்து விடும் ஆயின் காலப் பரிதி காயெனக் காயினும் கண்ணீர் முத்துக்கள் மட்டும் ஆவி ஆகா போல் இருக்கிறதே, சத்தியா ? சோகக் கவிதைக்கு வாழ்த்துச் சொன்னால் சோகம் நிரந்தரமாகி விடுமே சத்தியா ! எனவே வேண்டாம், நானும் அதில் பங்கேற்று அமைகிறேன் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Sep 3 2008, 05:35 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
உன் நினைவுகளும் நானும்...வாழ்த்துகள் சத்தியா...
கவிதை வாசிக்கும் போது.. நேரிலே காட்சி வந்து கண்ணைநிறைக்கிறது... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Sep 3 2008, 07:20 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,221 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
சத்தியா மிகவும் தொடுகிறது உள்ளத்தை
எழுதிவிடுங்கள் இந்த கணம் வெளியேறி அடுத்தசெக்கன் உள்வாங்கும் இந்த வலி... தொடரும் வருத்ததிலும் தொடுகிறதே ஒரு சுகம்...அது அந்த இனிய நினைவுகள் தான்.. |
|
|
|
Sep 4 2008, 06:09 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
QUOTE ஆண்டுகள் பல கடந்தாலும் மீண்டும் அந்த வீதியோரம் என்றாவது நீ பயணம் செய்தால்... அங்கே விழுந்து கிடக்கும் அந்தத் துளிகள் சொல்லும் கதைகளை ஓர் தடவை உன் காதுகளைக் கூர்மைப்படுத்தி கேட்டுத்தான் பாரேன். ஆஹா! அழகான ஆழமான நெஞ்சை தொடும் கவிதை வரிகள்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சத்தியா! -------------------- |
|
|
|
Sep 6 2008, 04:09 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
வாழ்த்துக்கள் சத்தியா...
-------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Sep 8 2008, 05:09 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 601 Joined: 20-July 06 Member No.: 581 |
நினைவுகள் என்றும் பசுமையானவை சத்தியா...நினைத்துக்கொண்டே இருப்போம் சுகமான அந்த காலங்களை...
-------------------- முடிந்தபின்பு தான் தெரிந்தது முற்றுப்புள்ளியின் வலி!
![]() |
|
|
|
Sep 12 2008, 11:19 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
மனம் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மகிழ்வாய்... ஒரு தினம் அருகிலிருந்து அருந்திய அத்தனை சுகங்களும்... மறுமுறை திரும்பி அந்தத் தெருவோரம் நான் மட்டும் செல்லும் போது... எழுந்த உணர்வுகள் எப்படி இருந்தன என்பதை எழுதினேன் வரிகளாய்... இது சுமையான வலி அல்ல! சுகமான ஓர் வலியே! ம்ம்... கவியோடு இணைந்து கருத்துச் சொன்ன சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:17 AM |