என் தாயுமானவனே! |
![]() ![]() |
என் தாயுமானவனே! |
Oct 15 2008, 09:11 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() என் தாயுமானவனே! வாழ்க்கைப் பாதையில் மரத்துப் போன மனதோடு வியர்த்துப் போன வரலாறு என்னோடு இழுபட்டுக் கிடக்க... உன் பாதச் சுவடுகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் என் தாகம் தீர்க்க எண்ணி... கால இருள் கிழித்து மண்ணை விட்டு விண்ணோக்கிப் பறந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் நூல் கொண்டு பாலமமைத்து… என் விரல்களுக்குள் விழுந்துவிட்ட வெண்மதியை மெல்லெனவே மீட்டி விளையாடிக் களித்த குழந்தையாய்... வண்ணக் கனவுகளின் வர்ணங்கள் கரையக் கரைய அங்குலம் அங்குலமாய் விழி மொழியால் உனை அளந்த அந்தக் கருக்கல் பொழுதுகளோடு கவிதைகள் கறந்து கறந்து காலங்கள் நீள நீள... மீண்டும் உன்னைத் தரிசிக்கும் ஆவல் என்னைத் தொல்லை செய்ய... ஓ... என் தாயுமானவனே! என்றோ ஓர் நாள் நீ தலை தடவும் வேளைகளில் என் தலைப் பாரம் நீங்கி தாகங்கள் தீர்ந்து... வாழ்வின் பூரணப் பக்கம் ஒன்று உனக்கும் எனக்கும் வசப்படும் என்னும் எண்ணத்தோடு நாட்களை நகர்த்தி நகர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 15 2008, 10:42 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நினைந்து நினைந்து..
நினைவில் உருகி உருகி.. அழும் விழிகளில் தேக்கிவைத்து.. வரும் கவிதைகளுக்கு வாழ்த்துகள் சத்தியா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 16 2008, 11:22 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கிறது!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சத்தியா! -------------------- |
|
|
|
Oct 16 2008, 01:54 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
நினைவுகளோடும்,
கனவுகளோடும் கழியும் நாட்கள் இனி இனிதே அமைந்திட வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சத்தியா. -------------------- |
|
|
|
Oct 16 2008, 02:46 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நகரும் நாட்கள் நனவாகி
நல்லதை நோக்கி நகரட்டும் பகரும் வார்த்தை ஓவியங்கள் பகலவ னாக ஜொலிக்கட்டும் ! வெகு நாட்களுக்குப் பின் எங்கள் சத்தியாவின் இனிய கவிதை மனம் தடவியது மந்தகாசமாய். . .! மழைநீர், வெண்மதி யாழ், தாயுமானவன் என்ற விளிப்பு அனைத்துமே மகாப் பிரமாதம் சத்தியா ! நிறையப் பொழியுங்கள் இது போல் . . .! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Oct 21 2008, 02:14 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
என்னையும் ஒரு நிமிடம் வியப்பில் ஆழ்த்திவிடுகிறது....
இப்படி ஒருதாய் கிடைக்க அவன் புண்ணியம் செய்தானோ... இல்லை தாயைப்போன்றதொரு பிள்ளையை பெற்றதர்க்கு நீங்கள்தான் புண்ணியம் செய்தீர்களோ.... எது எப்படியாகினும் நீங்கள் மீண்டும்.. மீண்டும்... சந்தித்துக்கொள்ள எனது வாழ்த்துக்கள்... -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Jan 2 2009, 12:50 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
ம்... கவிதையோடு இணைந்து கருத்துச் சொன்ன நெஞ்சங்களிற்கு என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:19 AM |