IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
வாழும் காலத்தில் வாழ்த்துப் பெற்ற கலைஞன&
velavan
post Sep 5 2004, 10:41 PM
Post #1


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8




இலங்கை வானொலி மூலம் புகழ்பெற்ற அறிவிப்பாளர் திரு. அப்துல் ஹமீது அவர்கள் இலண்டன் கலை ஆர்வலர்களால் வாழ்த்திக் கௌரவிக்கபட்டார். கடந்த ஜுலை 31ம் திகதி சனிக்கிழமை மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் இவ்விழா சிறப்புடன் நடைபெற்றது. முற்றிலும் ஈழத்துப் பிரமுகர்கள், குறிப்பாக புலம்பொயர் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இலண்டன் வாழ் பெரியோரெல்லாம் கலந்து சிறப்பித்தார்கள். கலையமுதம் 2004 என மகுடமிடப்பட்ட இந்த கலை நிகழ்வு அமைதி வணக்கம் மங்கள விளக்கேற்றல் என்பவற்றைத் தொடர்ந்து நாட்டியக் கலைஞர் திருமதி.ராஹினி ராஐகோபால் அவர்களது மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமானது. அடுத்து சின்னக்குட்டி தயாநிதி எழுதி இயக்கிய நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து காலச்சுவடுகளின் ஒரு துளி ஒளிப்படத் தொகுப்பு திரையிடப்பட்டது. இந்த பாராட்டு விழாவில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத தென்னிந்தியக் கலைஞர்கள் வழங்கிய வாழ்த்துக்கள் அதில் பதிவாகி இருந்தன.
அடுத்ததாக வாழ்த்துரைஞர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அமுதுப்புலவர், ஆனந்தராணி பாலேந்திரா, தீபம் மு.நித்தியானந்தன், சண்ரைஸ் வானொலி மேலாளர் கலாநிதி ஆர்.நித்தியானந்தன், பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரெட்ணம், கனடா தமிழோசையை சேர்ந்த சிறிகாந்தன், யோகா தில்லைநாதன், கந்தையா இராஐமனோகரன், ரி.ராஐகோபால் ஆகியோரை விழாவிற்கு தலைமைதாங்கிய நாடகர் ஏ.சி.தார்சீஸியஸ் வரவேற்று மேடையில் அமரச்செய்தார். தொடர்ந்து விழாவின் நாயகன் பீ.எச்.அப்பதுல்ஹமீத் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடைக்கு வருகை தந்த பீ.எச்.அப்பதுல்ஹமீத் தம்பதிகளை பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த மாலாமளிகை அதிபர் வரதன் மாலை அணிவித்து கௌரவித்தார்.

விழாவின் அடுத்த நிகழ்வாக மலர் வெளியீடு இடம்பெற்றது. விழாவிற்கு தலைமைதாங்கிய நாடகர் ஏ.சி.தார்சீஸியஸ் அவர்கள் பாராட்டுவிழா சிறப்புமலரான கலையமுதத்தை வெளியிட்டு வைக்க அதன் முதல் பிரதிகளை வைத்தியக் கலாநிதி திருமதி. சசிகலா இராஐமனோகரன், பரிஸடன் யோசப், அப்புக்குட்டி இராஐகோபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் மலர் பார்வையாளருக்கு மண்டபத்தில் விநியோகிக்கப்பட்டது. இந்த கலையமுதம் சிறப்பு மலரில் அப்பால் தமிழ் குழுமமும் தனது வாழ்த்தினை பதிவு செய்திருந்தது. தொடர்ந்து ஈழத்து இசைமாலையும், வாத்துரைகளும் இடம்பெற்றன. பாட்டும் பேச்சும் கலந்து ஒரு புதிய நிகழ்ச்சி வடிவம் வாழ்துரையாக அமைந்தது. வாழ்த்துரை வழங்கியவர்களில் குறிப்பாக ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் வாழ்த்துரைக்கும்போது இந்த சாதாரண வானொலி அறிவிப்பாளருக்கு ஏன் இந்த பாராட்டுவிழா என்ற கேள்வியை எழுப்பி நேர்மையாகச் சொன்னால் எங்கள் ஈழச்சமூகத்தினர் தராதரம் பற்றிய பிரக்ஞையுடன்தான எதிலும் பணியாற்றுவார்கள். நான் இலங்கை வானொலியில் பணியாற்றியபோது வானொலி அறிவிப்பாளனுக்கு எந்தவிதமான சமூக அங்கிகாரமும் இருந்ததில்லை. அதனை மாற்றியமைத்தவர் அப்பதுல்ஹமீத். அதனால் இந்த விழா எனக் குறிப்பிட்டார்.

பாரட்டுவிழாவின் முக்கிய நிகழ்வாக அப்பதுல்ஹமீத் அவர்களுக்கு தமிழ்க்குரல்வாணன் என்கிற் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது. அவ்வேளையில் அரங்கில் இருந்தோர் அனைவரும் எழுந்து நின்ற கைதட்டி மரியாதை செலுத்தினர். அவ்வேளையில் அப்பதுல்ஹமீத் அவர்ளால் எழுதப்பட்டதான ஓ வசந்தமே என்ற பாடல் ஈழத்துப்பாடகர் பிறேமானந் அவர்களால் பாடப்பட்டது நிகழ்ச்சிக்கு அழகூட்டியது.
ஏற்புரை வழங்க முன்வந்த விழா நாயகர் பீ.எச்.அப்பதுல்ஹமீத் அவர்கள் மேடையில் வாய்விட்டே அழுதார். பேச வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்ணீர் கணீர் என்ற குரலுக்குரியவரை பேசவிடவில்லை. விழாவின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும் அவரை உணர்ச்சிவசப்படச் செய்து விட்டது. சிறிது நேரத்தில் தன்நிலைக்கு திரும்பிய பீ.எச்.அப்பதுல்ஹமீத் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். சிறப்பாக தன்னை கௌரவித்த எஸ்.கே.ராnஐனுக்கும் அவர் சார்ந்த உலகத் தமிழ் கலையகத்திற்கும் நன்றி பகர்ந்தார். இலண்டன் வாழ் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பீ.எச்.அப்பதுல்ஹமீத் அவர்களின் ஒலிக்களஞ்சியம் என்னும் இணையத்தளம் ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த இணையத் தளத்திற்கு www.bhabdulhameed.com என்ற முகவரி ஊடாக நுழையலாம்.

எழுதியவர்: வானமுதன்,
நன்றி: அப்பால் தமிழ்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 6 2004, 09:02 AM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (velavan @ Sep 5 2004, 10:41 PM)
ஏற்புரை வழங்க முன் வந்த விழா நாயகர் பீ.எச்.அப்பதுல்ஹமீத் அவர்கள் மேடையில் வாய்விட்டே அழுதார். பேச வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்ணீர் கணீர் என்ற குரலுக்குரியவரை பேசவிடவில்லை. விழாவின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும் அவரை உணர்ச்சிவசப்படச் செய்து விட்டது.

ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif

ஆனந்தக் கண்ணீரா? smile.gif

ஒரு கலைஞன் என்பவன் வாழும் காலத்தில் வாழ்த்துப் பெற வேண்டும்.
அதுதான் அந்தக் கலைஞனுக்கு கிடைக்கும் சந்தோசம். ஆனால் எம்மவர்கள்
அதைச் செய்யத் தவற விட்டு விட்டு; அந்தக் கலைஞன் இல்லாத போது பட்டங்களைக் கொடுத்து கெளரவிப்பார்கள். அதில் என்ன இருக்கிறது? வாழும் காலத்தில் வாழ்த்துப் பெற்றிருக்கிறார் அறிவிப்பாளர் திரு. அப்துல் ஹமீது. நானும் கலைஞன் அப்துல் ஹமீதின் ஓர் ரசிகைதான். அந்த வகையில் நானும் "தமிழ்க்குரல்வாணன்" அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றி வேலவன் அண்ணா.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
roy
post Sep 6 2004, 01:45 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 6 2004, 07:27 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE (sathiya @ Sep 6 2004, 11:02 AM)
QUOTE (velavan @ Sep 5 2004, 10:41 PM)
ஏற்புரை வழங்க முன் வந்த விழா நாயகர் பீ.எச்.அப்பதுல்ஹமீத் அவர்கள் மேடையில் வாய்விட்டே அழுதார். பேச வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்ணீர் கணீர் என்ற குரலுக்குரியவரை பேசவிடவில்லை. விழாவின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும் அவரை உணர்ச்சிவசப்படச் செய்து விட்டது.

ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif

ஆனந்தக் கண்ணீரா? smile.gif

ஒரு கலைஞன் என்பவன் வாழும் காலத்தில் வாழ்த்துப் பெற வேண்டும்.
அதுதான் அந்தக் கலைஞனுக்கு கிடைக்கும் சந்தோசம். ஆனால் எம்மவர்கள்
அதைச் செய்யத் தவற விட்டு விட்டு; அந்தக் கலைஞன் இல்லாத போது பட்டங்களைக் கொடுத்து கெளரவிப்பார்கள். அதில் என்ன இருக்கிறது? வாழும் காலத்தில் வாழ்த்துப் பெற்றிருக்கிறார் அறிவிப்பாளர் திரு. அப்துல் ஹமீது. நானும் கலைஞன் அப்துல் ஹமீதின் ஓர் ரசிகைதான். அந்த வகையில் நானும் "தமிழ்க்குரல்வாணன்" அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றி வேலவன் அண்ணா.

நன்றி வேலவன்.

சத்தியா கூறியிருப்பது முற்றிலும் உண்மை தான்.
நான் கொழும்பில் இருந்த போது அப்துல் ஹமீதின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்துள்ளேன். தனது குரல் வலத்தால் அணைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்!

இலங்கை வானொலியின் முன்னால் அறிவிப்பாளர், மறைந்த K.S ராஜாவை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். எனது மாமாவின் நெருங்கிய நண்பர் அவர். அவரின் குரலுக்கும் அப்படி ஓர் ஈர்ப்பு தன்மை.
அவர் இருக்கும் போதோ, மறைந்த போதும் அவரை யாருமே கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் தான். sad.gif

"நீயா" திரைப் படத்திற்கு வானொலியூடாக விமர்சனம் செய்த முறை யாவரையும் கவர்ந்தது.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Sep 6 2004, 09:39 PM
Post #5


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



QUOTE (rennynimal @ Sep 6 2004, 07:27 PM)
இலங்கை வானொலியின் முன்னால் அறிவிப்பாளர், மறைந்த K.S  ராஜாவை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். எனது மாமாவின் நெருங்கிய நண்பர் அவர். அவரின் குரலுக்கும் அப்படி ஓர் ஈர்ப்பு தன்மை.
அவர் இருக்கும் போதோ, மறைந்த போதும் அவரை யாருமே கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் தான். sad.gif

இப்பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழ் கலையகம் என்கிற அமைப்பின் இயக்குனரோடு இது தொடர்பான பேட்டியொன்றையும் நிலா அவர்கள் தயாரித்து எனக்கு அனுப்பியிருந்தார்.

எனினும், சில வாத விவாத முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக அந்தப்பகுதியினை நாங்கள் முற்றத்தில் இணைக்கவில்லை.

சமாதானச்சுருள் குறுந்திரைப்படங்கள் பற்றிய லண்டன் தகவல்களை அறிவதற்காக நான் நிலா அவர்களை கேட்டபொழுது ஏற்பாட்டுக்குழு தனக்குத் தெரிந்தவர்கள் என்பதனால் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுத்தருவதாக கூறியிருந்தவர்,மேலதிகமாக அப்துல் ஹமீட் பாராட்டு விழா தொடர்பாகவும் உலகத் தமிழ் கலையகம் தொடர்பான தகவல்களையும் பெற்று அதனை எனக்கு ஆக்கமாக தயாரித்தும் அனுப்பியும் இருந்தார்.

நடு நிலையில் இருந்து விமர்சனம் செய்யும் பொழுது கருத்துக்களில் பல முரண்பாடுகள் தோன்றலாம், அதுவும் நடந்து முடிந்த ஒரு விடயம் என்பதால் இதனை தவிர்த்துக்கொள்வோம் என்று மறுநாள் நிலா அவர்கள் கூறியதால் அந்த ஆக்கத்தினையும் நான் இங்கு இணைக்கவில்லை.

அன்று ஏற்பாட்டுக்குழுவின் இயக்குனருக்கு, அவரது முழுப்பெயர் தெரியாது ஆனால் சிறி என்று அவரை அழைத்தார்கள், அவரிடம் நிலா அவர்கள் கூறிய ஒரு விடயம் எனக்கு ஞாபகம் இருக்கிறது "நீங்கள் இந்த விழாவை எதற்காக செய்கிறீர்கள் என்பதோ அல்லது யாருக்காக செய்கிறீர்கள் என்பதைப்பற்றி நாங்கள் இங்கு யோசிக்கவில்லை, ஒரு கலைஞன் வாழும் போதே கெளரவிக்கப்படுகிறான் என்ற பொது நோக்கில் உங்கள் முயற்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்" என்று கூறினார்.

உலகத் தமிழ் கலையகம் இவ்வகைப் பாராட்டு விழாக்களை பேதமின்றி தொடரவேண்டும், அதே நேரம் இத்தடவை பாராட்டப்பட்ட அப்துல் ஹமீட் அவர்களுக்கு முற்றம் சார்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
velavan
post Sep 6 2004, 11:35 PM
Post #6


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



யாழ் சுதாகரின் 'கே.எஸ்.ராஜா' பற்றிய நினைவலைகள்!!
வாசித்துப் பாருங்களேன்! biggrin.gif
http://ksrajah.blogdrive.com/
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 7 2004, 04:11 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி பவன்.

QUOTE
அன்று ஏற்பாட்டுக்குழுவின் இயக்குனருக்கு, அவரது முழுப்பெயர் தெரியாது ஆனால் சிறி என்று அவரை அழைத்தார்கள்,  ohmy.gif  ohmy.gif


சுத்தம்!....... sad.gif sad.gif sad.gif sad.gif


QUOTE
அவரிடம் நிலா அவர்கள் கூறிய ஒரு விடயம் எனக்கு ஞாபகம் இருக்கிறது "நீங்கள் இந்த விழாவை எதற்காக செய்கிறீர்கள் என்பதோ அல்லது யாருக்காக செய்கிறீர்கள் என்பதைப்பற்றி நாங்கள் இங்கு யோசிக்கவில்லை, ஒரு கலைஞன் வாழும் போதே கெளரவிக்கப்படுகிறான் என்ற பொது நோக்கில் உங்கள் முயற்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்" என்று கூறினார்.


நன்றி நிலா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Sep 7 2004, 07:32 PM
Post #8


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



QUOTE (rennynimal @ Sep 7 2004, 04:11 PM)
QUOTE
அன்று ஏற்பாட்டுக்குழுவின் இயக்குனருக்கு, அவரது முழுப்பெயர் தெரியாது ஆனால் சிறி என்று அவரை அழைத்தார்கள்,  ohmy.gif  ohmy.gif


சுத்தம்!....... sad.gif sad.gif sad.gif sad.gif



நன்றி றெனி,

அவரது முழுப்பெயர் சிறிஸ்கந்தராஜா.

இவர் பற்றிய விபரங்கள் விரைவில் கலைஞர் அறிமுகம் பகுதியிலும் இணைக்கப்பட இருக்கிறது.

உலகத்தமிழ் கலையகத்தின் இயக்குனர்கள் என்று இருவரது பெயர்கள் இந்தப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிஸ்கந்தராஜா மற்றும் எஸ்.கே ராஜன் ஆகிய இருவருமே அவர்கள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 7 2004, 07:35 PM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி பவன்.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 7 2004, 09:57 PM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (bavan @ Sep 6 2004, 09:39 PM)
அன்று ஏற்பாட்டுக்குழுவின் இயக்குனருக்கு, அவரது முழுப்பெயர் தெரியாது ஆனால் சிறி என்று அவரை அழைத்தார்கள், அவரிடம் நிலா அவர்கள் கூறிய ஒரு விடயம் எனக்கு ஞாபகம் இருக்கிறது "நீங்கள் இந்த விழாவை எதற்காக செய்கிறீர்கள் என்பதோ அல்லது யாருக்காக செய்கிறீர்கள் என்பதைப்பற்றி நாங்கள் இங்கு யோசிக்கவில்லை, ஒரு கலைஞன் வாழும் போதே கெளரவிக்கப்படுகிறான் என்ற பொது நோக்கில் உங்கள் முயற்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்" என்று கூறினார்.


நிலா சரியாகத் தான் கூறி இருக்கின்றார். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
நிலா
post Sep 8 2004, 10:41 PM
Post #11


நிர்வாகி
**********

Group: Support
Posts: 651
Joined: 17-December 03
From: ஐக்கிய இராச்சியம்
Member No.: 1



கருத்துக்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள். விடயத்தினை இணைத்த வேலவனுக்கும் விசேடமான நன்றிகள்.நண்பர் சிறி அவர்களின் நிழற்படத்தினைப் பெறுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தினால் அவரது கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பிப்பதிலும் தாமதமாக இருக்கின்றது.விரைவில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

QUOTE (rennynimal @ Sep 6 2004, 08:27 PM )
அவர் இருக்கும் போதோ, மறைந்த போதும் அவரை யாருமே கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் தான்


நண்பர் றெனிநிமலின் ஆதங்கத்தை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.ஆனாலும் ஒரு உண்மை உணரப்படத் தேவையாக இருக்கின்றது.எந்த ஒரு வானொலி கலைஞனோ தொலைக்காட்சி கலைஞனோ ஒலி வாங்கியை விட்டு மறையும் நாளில் மக்கள் மனதில் இருந்தும் மறைந்து விடுகிறார்.இது சாதாரண விடயம்! திறமையானவரோ இல்லை சகித்துக்கொள்ள வேண்டியவரோ யார் அந்த இடத்தில் நடைமுறையில் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் மரியாதை.காலங்கள் தாண்டியும் மக்கள் ஒரு கலைஞரை ஞாபகம் வைத்திருப்பபது கலைஞர்கள் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்புக்கும் மரியாதைக்கும் சாட்சியாகும்.இவற்றையும் விட எமது சமூகத்தில் அரசியல் காரணங்களாலும் கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.மக்கள் மறக்கும் அளவுக்கு ஒதுங்க வேண்டிய மனநிலையை அடைகின்றனர்.இவையெல்லாம் கலைஞர்களின் சோக வரலாறுகள்.மறைந்த கலைஞர் கே.எஸ்.ராஜாவின் நினைவுகளை சுமந்து நிற்கும் றெனிநிமலுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.காலத்தின் கட்டாயத்தில் ஏற்படுத்தப்படும் அசாதாரண விதியை மாற்ற இனியாவது ஒரு புது உலகம் பிறக்குமா?

நன்றிகள் - நிலா.


--------------------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 9 2004, 02:18 PM
Post #12


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (nila @ Sep 8 2004, 10:41 PM)
காலத்தின் கட்டாயத்தில் ஏற்படுத்தப்படும் அசாதாரண விதியை மாற்ற இனியாவது ஒரு புது உலகம் பிறக்குமா?


rolleyes.gif rolleyes.gif rolleyes.gif rolleyes.gif rolleyes.gif

நன்றி நிலா.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 9 2004, 03:53 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி நிலா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM