ஊற்றுக . . . !, MAGUDADHEEBAN |
![]() ![]() |
ஊற்றுக . . . !, MAGUDADHEEBAN |
Nov 26 2008, 01:17 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஊற்றுக . . . !
இருந்த ஸ்தானம் தெரிந்தி டாமல் எங்கெல் லாமோ ஏகுது ஏகத்துக்கும் நொந்து நொந்து இதயம் ரெம்ப நோகுது அருந்த வேண்டும் அள்ளிக் கொண்டுஎன் ஆவல் மட்டும் கூடுது அகப்ப டாமல் செல்லச் செல்ல ஆவி பட்டு வேகுது உன்னை முற்றும் உறிஞ்சிக் கொள்ள உயிர் துடித்த பாடுகள் ஒவ்வொன் றுக்கும் நீட்சி உண்டு உறக்க மற்ற இராவுகள் மின்ன லோடு மேவி நிற்க மேனி பாவம் வாடுது மிச்ச மீதி நித்தி ரைக்குள் மெல்ல மெல்லத் தேடுது கைம டித்துப் படுத்த வாறு காத்தி ருந்த தெத்தனை காத லோடு வரவை எண்ணிக் கனன்று நின்ற தெத்தனை ? நெய்மு டித்த குழலி யோடுஎன் நெஞ்ச கத்துள் ஆடுக நிர்மலத்தி லான தேகம் நீழ லுக்குள் மூடுக ராமு ழுக்க ஆண்டு கொண்டு நர்த்த னத்தைக் காட்டுக நாமு ழுக்கப் பாமு ழுக்க நயன பாஷை நீட்டுக தீமு ழுக்க ஆன மேனி திகுதி குப்பை மூட்டுக சீவ னுக்குள் அமுத வெள்ளம் சிந்து பாடி ஊற்றுக சிக்கி டாமல் செல்வ தெங்கு திசையை மட்டும் செப்புக தேடி வந்து சேர்வன் நீழல் திருவ டிக்குள் அப்புக மக்கி டாத தேகம் மாறி மந்தி ரிக்க உட்புக மார்க்க மொன்று சொல்ல வேணும் மதிவெ ளிச்சம் துப்புக
This post has been edited by மகுடதீபன்: Nov 26 2008, 01:20 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 26 2008, 04:50 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அருமை! அருமை!!.....
வாழ்த்துகள் மகுடதீபனண்ணா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 26 2008, 06:05 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
கவிதையில் எளிமையாய்ச் சந்தமுடன் வந்து விழும் சொற்கள், கவிஞனின் மனம் இறைமையின் அருகில்
வந்துள்ளமையைக் காட்டுகிறது. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Nov 27 2008, 07:50 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
மிகவும் அருமையான கவிதை வரிகள்!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Nov 28 2008, 01:00 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
கவிதைச் சந்தம் இரசித்து வாசித்த
தனிமதி, ஜெயராமன், இரதிதேவி அனைவர்க்கும் நன்றி ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 29 2008, 01:22 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
சந்தக் கவியில் கொஞ்சம் நனைந்தேன்.
இந்தக் கவியில் இதயம் மகிழ்ந்தேன். ஊற்றுக..இன்னும் ஊற்றுக....... தாகம் தணிந்திலேன். -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Nov 29 2008, 02:42 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
சந்தோஷம் அன்பரே,
இந்த வகைக் கவிதைகள் என் ஆன்ம ஊற்றில் இருந்து வருபவை, இன்னும் நிறைய வரும் சூர்யக்குமார் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Dec 17 2008, 10:44 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,354 Joined: 9-March 08 Member No.: 2,724 |
ஊற்றுக . . . ! இருந்த ஸ்தானம் தெரிந்தி டாமல் எங்கெல் லாமோ ஏகுது ஏகத்துக்கும் நொந்து நொந்து இதயம் ரெம்ப நோகுது அருந்த வேண்டும் அள்ளிக் கொண்டுஎன் ஆவல் மட்டும் கூடுது அகப்ப டாமல் செல்லச் செல்ல ஆவி பட்டு வேகுது உன்னை முற்றும் உறிஞ்சிக் கொள்ள உயிர் துடித்த பாடுகள் ஒவ்வொன் றுக்கும் நீட்சி உண்டு உறக்க மற்ற இராவுகள் மின்ன லோடு மேவி நிற்க மேனி பாவம் வாடுது மிச்ச மீதி நித்தி ரைக்குள் மெல்ல மெல்லத் தேடுது கைம டித்துப் படுத்த வாறு காத்தி ருந்த தெத்தனை காத லோடு வரவை எண்ணிக் கனன்று நின்ற தெத்தனை ? நெய்மு டித்த குழலி யோடுஎன் நெஞ்ச கத்துள் ஆடுக நிர்மலத்தி லான தேகம் நீழ லுக்குள் மூடுக ராமு ழுக்க ஆண்டு கொண்டு நர்த்த னத்தைக் காட்டுக நாமு ழுக்கப் பாமு ழுக்க நயன பாஷை நீட்டுக தீமு ழுக்க ஆன மேனி திகுதி குப்பை மூட்டுக சீவ னுக்குள் அமுத வெள்ளம் சிந்து பாடி ஊற்றுக சிக்கி டாமல் செல்வ தெங்கு திசையை மட்டும் செப்புக தேடி வந்து சேர்வன் நீழல் திருவ டிக்குள் அப்புக மக்கி டாத தேகம் மாறி மந்தி ரிக்க உட்புக மார்க்க மொன்று சொல்ல வேணும் மதிவெ ளிச்சம் துப்புக நாயகனின் பேருபதேசம் 10 ஊற்றுதே எப்போதும் என் அருளாறு! ஆற்றுள் ஆழ மூழ்கி உன் மனமாறு! மெய்வழிச் சாலையின் இரகசிய மார்க்கம் மெய்யுன் உடம்புளே பகிரங்கமாய் விளம்பியே உய்வித் துனைஎனில் வேறறச் சேர்க்கவே உய்ந்தேன் நடராஜ வள்ளல் நான்! பொய்க்கும் உன்மெய்யை மெய்யாகவே மெய்யாய்ச் செய்விக்கும் என் மகாயோகம் தேர்! உன் மகுடதீப ஒளியில் என்னைப் பார்! அம்மையப்பனாம் நாத-விந்து கலாதி சற்குரு உன் முதுகடியில் இட்ட தெய்வீக வித்தை ஞாபகங்கொள்! அடுத்த கணமே நாபியின் கீழ் குண்டலினி நாகம் விழிப்பதில் கவனம் வை! படமெடுத்த நாகம் நாபியில் உன் ஆணவத்தைத் தீண்ட விடு! ஆணவம் நசிய உன் மனமடங்க, நடு மார்பின் கீழ் படமெடுக்கும் என் அருட்கரத்தைத் தொடு! நடு மார்பில் உதயமாகும் அருட்பெருஞ்ஜோதியைத் தரிசி! தொண்டையின் கீழ்ப் பாயும் தனிப்பெருங்கருணை வெள்ளத்தில் தொப்பமாய் நனை! தொண்டையில் நாயகனாம் என் அருள்வாக்கைக் கேள்! நெற்றியில் மாயைத் திரை விலக சிதம்பர தரிசனம் காண்! தலையுச்சியில் மனிதமுன் மகோன்னத எழுமையில் சேர்! தலைக்கு மேல் நிராதாரப் பாலம் எட்டு! அதை முட்டு! நிராதார எழுமை உன் தலையுச்சி தொட்டு ஆறாதாரம் விழுகின்ற அதிசய இற(ர)க்கத்தை உணர்! என் பரஞான போதம்(1) உன் தலையுச்சி பிளக்கும்! என் தூய நோக்கு(2) உன் நெற்றி வெளுக்கும்! என் குரு மந்திர அகதீட்சையால்(3) உன் தொண்டை திறக்கும்! என் இருதய பூமி(4) உன் நடு மார்பில் இற(ர)ங்கும்! என் சத்திய தரிசனம்(5) உன் நாபியில் விளங்கும்! உன் நாபியின் கீழ் நிகழும் ஓர் அதிசயப் பரிமாற்றம்(6)! உன் முதுகடியில் ஜொலி ஜொலிக்கும் என் ஜோதி ஸ்வரூபம்(7)! உன் பாதங்களின் கீழ்ப் பூமியைப் புரட்டும் நவயுக உதயம்! -------------------- |
|
|
|
Dec 17 2008, 11:46 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நடத்தரயன் சொல்வது போல் அமைந்த
பேருபதேசம்-10ல் தெப்பமாய் நனைந்தேன் . . உம்மையும் நினைந்தேன் நன்றி நாகரா ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:28 AM |