யாரழுது யார் துயரம்... |
![]() ![]() |
யாரழுது யார் துயரம்... |
Jan 2 2009, 12:56 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() யாரழுது யார் துயரம் மாறும்...? விடியல்களை எழுப்பி பகல்களை விரட்டி பொழுதுகள் சாய்ந்து ஆண்டொன்று முடிந்து போகும் அந்த இரவின் மடியில்... சாளரத்தை மெல்லத் திறந்து வெளியே எட்டிப் பார்க்கிறேன் வண்ணங்கள் சிதறச் சிதற வந்து விழும் வான வேடிக்கைகளும்... மின்னியும், முழங்கியும் ஆரவாரித்து வரும் வெடிகளின் ஓசையும்... புதிய ஆண்டை வரவேற்கும் வாழ்த்து ஒலிகளுமாய் என் காதைப் பிளக்கிறது. அமைதியாய் நின்று அனைத்தையும் பார்த்தவேளை அப்பாவின் நினைவும் அக்காவின் நினைவும் வந்து அலைமோதிச் சென்றன. அங்கே... இயந்திரப் பறவைகளின் எச்ச வீச்சில் விழும் குண்டுகளுக்கும்... போர்ப்பறை முழங்கி விழும் செல்களுக்கும் நடுங்கி... முகவரியைத் தொலைத்த முகங்களாய் எந்தப் பதுங்கு குழியில் பதுங்கிக் கிடப்பார்களோ...? என்ற வேதனை மனதை வாட்ட எதையுமே ரசிக்க மனமின்றி படுக்கையில் விழுந்து உருண்டு பிரண்டு சற்று கண்ணயர்ந்த வேளை... அதிகாலை நான்கு மணி அலறிய தொலைபேசி அழைப்பில் அடுத்த முனையில் தளதளத்த குரலோடு நலம் விசாரித்தபடி என் அப்பா !!! என்னப்பா...? என்னாச்சு...? குரலெல்லாம் வித்தியாசம் என்றேன். "இல்லடா பனிக் குளிருக்கு குரல் அடைப்பு"... என்றார். வலிகளால் அவர் விழிகள் நனைந்தபோதும் என்னைச் சமாதானப்படுத்த இப்படியெல்லாம் சமாளிக்கிறார் என்பது எனக்கும் தெரியும். ஓ!... அப்படியா...? என நானும் பொய்யாச் சிரித்து உள்ளே அழுது துடித்து அதை மறைக்க வலிந்து நான் முயன்றபோது மூச்சுத் திணறி வார்த்தைகளும் தடுக்கி விழ... அவிழ்ந்து விழுந்தன கண்ணீர் முடிச்சுக்கள் !!! ம்... யாரழுது யார் துயரம் மாறும்...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 2 2009, 04:24 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
புத்தாண்டை நோக்கி கன்கள் பார்த்தாலும் மனம் சோகத்தில் தான் வீழ்ந்து கிடக்கிறது. இருந்தாலும் மேலோட்டமாக
நடித்துக்கொள்கிறோம். மின்னற்கீற்றாய்ச் சோகம் வைப்பதில் தங்கள் திறன் இக்கவிதையிலும் தெரிகிறது. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Jan 2 2009, 07:23 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
உனக்கு மட்டுமா இந்தச் சோகம்.
இப்போ கிளியும் போய்விட்டது. என் அன்னை என்ன பாடோ அறிந்திலேன் இதுவரை. -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Jan 4 2009, 03:55 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
புத்தாண்டாண்டு பிறந்தாளும் நம் துயரங்கள் எப்போது தான் மாறி புத்துணர்வு பெறபோகிறோதோ தெரியவில்லை!
நிச்சயம் இந்நிலைமை மாறும் சத்தியா! -------------------- |
|
|
|
Feb 13 2009, 12:18 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
ம்... கவிதையோடு இணைந்து கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:20 AM |